
பாஜகவின் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடியை முடிந்தால் திமுக தடுத்துப் பார்க்கட்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் 192 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,
கைதானவர்களை விடுதலை செய்யுங்கள் என நாங்கள் கெஞ்சவில்லை. மறைந்த நேருவுக்கே கறுப்புக்கொடி காட்டி திமுக வரலாறு படைத்துள்ளது. இன்று ஏக சக்கரவர்த்தியாக உள்ள மோடியை, சாலை வழிப் பயணமாக வர முடியாத அளவிற்கு, கறுப்புக்கொடி காட்டி, வரலாறு படைத்தோம். ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்டத்தை தான் செய்கிறோம். மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் செயல்படும், ஆளுநர், உடனே ராஜினாமா செய்ய வேண்டும். எங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மாலையில் விட்டுவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை, தொடர்ந்து நடத்துவோம் என அவர் கூறியிருந்தார்.
நாங்கள் நேருவுக்கும்,இந்திரா காந்தி அவர்களுக்கும் கருப்புக்கொடி காட்டியுள்ளோம் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இவர்கள் இந்திராவை தாக்கி இரத்தம் வந்தபோது எவ்வளவு அருவருக்கத்தக்க வகையில் கருணாநிதி கூறினார் என்றும் எங்களுக்குத் தெரியும். 1/2
— H Raja (@HRajaBJP) June 23, 2018
இந்நிலையில், இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,
நாங்கள் நேருவுக்கும், இந்திரா காந்தி அவர்களுக்கும் கருப்புக்கொடி காட்டியுள்ளோம் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இவர்கள் இந்திராவை தாக்கி இரத்தம் வந்தபோது எவ்வளவு அருவருக்கத்தக்க வகையில் கருணாநிதி கூறினார் என்றும் எங்களுக்குத் தெரியும்.
ஆனால் மோடி அவர்கள் இவர்கள் கருப்பு பலூன் விட்டதால் பிரதமர் ரோட்டில் செல்ல பயந்து ஆகாயமார்கமாய் சென்றார் என்று மார்தட்டுவது சிறுபிள்ளை தனம். பிரதமர் பாஜக வின் பொது கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். முடிந்தால் திமுக தடுத்துப் பார்க்கட்டும். ஒப்பன் மவனே சிங்கம்டா வேலை இங்கு வேண்டாம்
— H Raja (@HRajaBJP) June 23, 2018
ஆனால் மோடி அவர்கள் இவர்கள் கருப்பு பலூன் விட்டதால் பிரதமர் ரோட்டில் செல்ல பயந்து ஆகாயமார்கமாய் சென்றார் என்று மார்தட்டுவது சிறுபிள்ளை தனம். பிரதமர் பாஜகவின் பொது கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். முடிந்தால் திமுக தடுத்துப் பார்க்கட்டும். ஒப்பன் மவனே சிங்கம்டா வேலை இங்கு வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.