Published on 25/02/2023 | Edited on 25/02/2023
![Group 2, Group 2A primary exam today in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/Izbst-ST0vmJU28Jj91NBv5bHxeCQ4KMsQBhtlg_Yfs/1677297565/sites/default/files/inline-images/th-5_137.jpg)
தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் குருப் 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்காக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை தமிழ் தேர்வும் மதியும் பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 55,071 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வும், நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கு தேர்ச்சி அடிப்படையிலும் பணி வழங்கப்படும்.