Skip to main content

கடைசி நேர்த்தில் தெரிந்த உண்மை; கலங்கிய மணம்பெண் - அதிர்ந்துபோன போலீஸ்!

Published on 17/03/2025 | Edited on 17/03/2025

 

groom is with another woman  day before wedding marriage will be canceled

திருவள்ளூர் மாவட்டம் கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயதான சரத்குமார்.  தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சரத்குமாரும், அவர் அவசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  பவித்ரா என்ற பெண்னும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தெரியாத சரத்குமாரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த விவகாரம் தெரிந்தும் சரத்குமார் அவரது பெற்றோரிடம் காதல் விவகாரம் குறித்துத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சரத்குமாருக்கு சேலை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் திருமணம் பேசி முடித்துள்ளனர். இந்த விவகாரம் சரத்குமாரின் காதலி பவித்ராவிற்கு தெரியவர, இது குறித்து அவர் சரத்குமாரிடம் கேட்டுள்ளார்.  ஆனால், ‘நான் திருமணத்திற்கு சம்பாதிக்கவில்லை. வீட்டில் பெற்றோர்கள் தான் பேசி முடித்துள்ளனர். நீ ஒன்றும் கவலைப்படாதே அந்த திருமணத்தை நிறுத்தி விட்டு உன்னைத் தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பவித்ராவை சமாதானம் செய்துள்ளார். அதனை அப்படியே பவித்ராவும் நம்பியுள்ளார்.

ஆனால் சரத்குமார் கூறியது  பொய் என்று போகப்போக பவித்ராவிற்கு தெரியவந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பவித்ராவின் அழைப்புகளை துண்டித்த சரத்குமார், ஒருகட்டத்தில் ‘உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது; உன்னால் முடிந்ததை பார்..’ என்று மிரட்டியுள்ளார். இதனால் பவித்ரா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது ஒரு புறமிருக்க அண்மையில் சரத்குமாருக்கும் வீட்டில் பேசி முடிக்கப்பட்ட பெண்ணிற்கு இடையே திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய நாள் அதாவது கடந்த 15 ஆம் தேதி பவித்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சரத்குமாருக்கும், பவித்ராவிற்கு ஏற்கனவே  திருமணம் செய்துகொண்டு இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் என்றும், அதனை மறைத்து தற்போது சரத்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள உள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில் தகவலின் பேரில் காவல்நிலையத்திற்கு வந்த மணப்பெண் வீட்டார் நடந்தவற்றை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். மேலும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சரத்குமார், பவித்ராவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து அவருடன் சேர்ந்து வாழ்வதாகவும் கூறியிருக்கிறார்.

அதே சமயம் இந்த திருமணத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்த பெண் வீட்டாரும், பல கனவுகளுடன் திருமண வாழ்கையில் அடியெடுத்து வைக்கக் காத்திருந்த மணப்பென்னும் கலங்கி நின்ற சம்பவம் காண்போரையும் கலங்க வைத்தது. 

சார்ந்த செய்திகள்