Published on 06/05/2022 | Edited on 06/05/2022
![Governor of Tamil Nadu meets Governor of Pondicherry!](http://image.nakkheeran.in/cdn/farfuture/U7mbZWHtkOvScYdvYCIWXm3Nw3sNkKfmDdr0iMEkenw/1651850975/sites/default/files/inline-images/E5645643.jpg)
சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு, தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் 'ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை' என்று பேட்டி அளித்தார்.