Published on 27/04/2020 | Edited on 27/04/2020
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது. கரோனாவால் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவு பொருந்தும் என்றும், ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 15 நாள், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் அரசுஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.