Published on 21/03/2022 | Edited on 21/03/2022
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (40). இவர், கடந்த 18ஆம் தேதி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, மறுநாள் 19ஆம் தேதி நீதிமன்ற காவலில் மணப்பாறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சிறைக் கண்காணிப்பாளர் ராமசந்திரன் உத்தரவின் பேரில் மணப்பாறை அரசு மருத்தவமனையில் அவரைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.