சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளிடம் வாண் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சுல்தான் கனி என்பவரிடமிருந்து ரூ.2 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி (சிங்கப்பூர் டாலர்) நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல விமான நிலையத்தில் ரூ.45.78 இலட்சம் மதிப்புள்ள 909 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா, ஆலத்தூரைச் சேர்ந்த கௌதம் (வயது 25 ) என்ற பயணி தனது காலணியில் (Shoes) பேஸ்டுடன் கலந்து 1,150 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தார். அதனைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்டிலிருந்து தங்கத்தை உருக்கிப் பிரித்து எடுத்தனர். அப்போது அதில் 909 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது.
இதனைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.45.78 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.