![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/XxE5ka2VswwjFBUBFwye5xSI1UqwdgQCno2VBvKg03w/1704689967/sites/default/files/2024-01/w2.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/jOETnP20x2Y3BBHGfu0wEp2uaigU82sfsN-7425aEFI/1704689967/sites/default/files/2024-01/w1.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/7VRiXlypCcSDiDl4RAAN0FnzT81UYJqjZdcDsM0Q9d8/1704689967/sites/default/files/2024-01/w3.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/F6Oh0PD11cNpohD9I2Ymaz-95yNm3zEyYwihGIjzXKM/1704689967/sites/default/files/2024-01/w4.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/nZv8NT5tEVU5bgnHh2s7h56fsetcw-NVVe3NI2Z5sm0/1704689967/sites/default/files/2024-01/w5.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/F0Ye2Jw9KRhUh2PkIBrfAUZ-D9hUBMUUx0HEY1Lbcf8/1704689967/sites/default/files/2024-01/w7.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/6UpJD_lBUxLpyB_Xi6Z1YnPXh6604t-nvZbBY43u3N8/1704689967/sites/default/files/2024-01/w6.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/4ECwRr3iFZwDKu35KKCipPoI_8T7Ow8aca6ZbqxZsHI/1704689967/sites/default/files/2024-01/w8.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/4DR6AxfI13_o3vYQiz9eHQtiUhIrxgsget3LnR1LJnU/1704689967/sites/default/files/2024-01/w9.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/hep7f_WWfh_wRGk4CC737qqMPwJTvtQddbUeRMgemqs/1704689967/sites/default/files/2024-01/w11.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/YdhXENin_4CpIR62j-SIqoKcPRmB3ObXM6o3sAwXxzg/1704689967/sites/default/files/2024-01/w10.jpg)
![Global Investors Conference held in Chennai (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/F9gQ7jXmiDL463syAZumVQWXv4ZwCEW9OpnI8acqVjY/1704689967/sites/default/files/2024-01/w12.jpg)
சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ - ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07-01-24) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன். மேலும், இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆனது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.