![glass breakage of bus; Three people were arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/ozt22DYrxwKvOxICmUjurcCl8Pwmy9BkcPDCZxdFlkg/1670226109/sites/default/files/inline-images/n222353_0.jpg)
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக மூன்று பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து கண்ணன்தாங்கல் கிராமப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்தில் சுப்பிரமணியன் (ஓட்டுநர்) சாரங்கன் (நடத்துநர்) இருந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட பெண் பயணிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது 3 இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் ஒலி எழுப்பிக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனுக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு எடுக்கப்பட்டது.
![glass breakage of bus; Three people were arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/GAHFFhmHejT4-BST4VWY6Amuo9qbwfNIjDFBAuP-3tI/1670226128/sites/default/files/inline-images/N222386_0.jpg)
மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்ற நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அரசு பேருந்து முகப்பு கண்ணாடியை உடைத்தனர். இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். பரபரப்பாக இருந்த சாலையில் திடீரென அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிவா என்கிற இயான், தியாகராஜன், சரவணன் என்ற அந்த மூன்று இளைஞர்களிடம் இருந்து 13 பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.