கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது கிருஷ்ணன் பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சிவகாமசுந்தரி. வயது 45. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தனியார் கம்பெனியில் வெளியூர்களில் வேலை பார்க்கிறார்கள். இவரது கணவர் பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமசுந்தரி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு அருகில் மது பாட்டில்கள், அட்டைப்பெட்டி சீட்டுகள் படுக்கையாக விடுக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
சிவகாமசுந்தரி மர்மமான முறையில் கொலை செய்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்க கோரி அவ்வூர் மக்கள் சாலை மறியல் செய்தனர். குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர விசாரணை செய்து 26 வயதான வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்கிற ஜெகதீசன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.
ஜெயசீலன் அளித்த வாக்குமூலத்தில், நான் வீடுகளுக்கு சுற்றிலும் பாதுகாப்புக்காக மூங்கில் வேலி அமைத்துத் தரும் வேலை செய்து வருகிறேன். அதன் காரணமாக சிவகாமசுந்தரி வீட்டுக்கு வேலி அமைத்துக் கொடுத்தேன். அப்போது சிவகாம சுந்தரி எனக்கு அறிமுகமானார். அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டோம். இரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் கீழே இருவரும் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்த நிலையில் எனக்கு வீட்டில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.
இதுசம்பந்தமாக நான் சிவகாமசுந்தரியிடம் போன் மூலம் தகவல் சொன்னேன். அவர் என்மீது கோபமாக இருந்தார். அந்த கோபத்தை தணிப்பதற்காக 14ஆம் தேதி இரவு வழக்கமாக சந்திக்கும் கரும்புத் தோட்டத்திற்கு வரச் சொன்னேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, திருமண விஷயத்தை கூறினேன். அதற்கு அவர் என்னை விட்டுவிட்டு வேறு திருமணமா என்று கோபப்பட்டார். அதனால் அவரை தாக்கினேன். அதில் அவர் இறந்து போனார். இறந்துபோனது அறிந்ததும் பயந்துபோய் தலைமறைவாகி விட்டேன். ஆனால் என்னை போலீசார் எனது செல்போன் செயல்பாடுகள் மூலம் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.