சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற 'மகுடம் மறுத்த மன்னன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் செல்வராகவன், நடிகை சுகாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் பங்கேற்றிருந்தார். முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்களில் அறிவுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செல்வராகவன் மேடையில் பேசுகையில், ''என்னைப் போன்ற கோடிக்கணக்காக திரண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் சில உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிறுவயது முதலே எனக்கு முதல்வரை மிகவும் பிடிக்கும். அவரது ஆழ்ந்த அறிவும், எப்பொழுதும் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கும் எண்ணமும் ஒவ்வொரு தமிழனுக்கும் புரியும். அப்போது எங்களுக்கு என்று ஒரு ஆசை இப்படிப்பட்ட பண்பட்ட ஒரு மனிதரே நமக்கு முதல்வராக வர மாட்டாரா என்பது தான். அது இப்போது நிறைவேறி இருக்கிறது'' என்றார்.
அதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், முதலில் எந்த படம் வெளியாகும் என செய்தியாளர்கள் கேட்கையில், ''முதலில் புதுப்பேட்டை-2 அப்புறம் ஆயிரத்தில் ஒருவன்-2'' என பதிலளித்தார்.