Published on 03/10/2022 | Edited on 03/10/2022
![Fire accident at Durga Puja pandal...](http://image.nakkheeran.in/cdn/farfuture/CNYSXl3HmCZRYj2tlJU7sR_164H-dGLJz3i2XeZbmT0/1664809204/sites/default/files/inline-images/n21293.jpg)
துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 5 பேர் துடிதுடித்து இறந்த நிலையில், 66 பேர் காயமடைந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோகி பகுதியில் துர்கா பூஜை பண்டிகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நேற்று இரவு ஆர்த்தி நிகழ்வு நடைபெற்றது. சுமார் 150 பேர் இந்த விழாவில் பங்கு பெற்றிருந்த நிலையில் ஹாலோஜன் லைட் அதிக வெப்பம் அடைந்து வயர்கள் தீப்பிடித்து எறிந்தது. இந்த விபத்தில் விழாவின் பந்தல் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 66 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.