Published on 29/05/2021 | Edited on 29/05/2021
![tn govt export companies reopening tn govt gazette notification](http://image.nakkheeran.in/cdn/farfuture/NYHvuUUMKPHNV-uYb0zWlqk4oYhls_6eH-M_qoiyhqo/1622279024/sites/default/files/inline-images/tn%20govt%20%283%29_5.jpg)
தமிழகத்தில் 8 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம். அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.