Skip to main content

மோடி படம் வைக்க வேண்டும்...!-புதுசு புதுசா யோசித்து திட்டமிடும் பா.ஜ.க.வினர்!

Published on 30/10/2020 | Edited on 31/10/2020
erode bjp

 

விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து விலகி தனது உறவினரான பா.ஜ.க.மாநில தலைவர் முருகன் தலைமையில் சமீபத்தில் பா.ஜ.க.வில் சேர்ந்தவர் ஈரோட்டைச் சேர்ந்த வினாயகமூர்த்தி என்பவர். அந்த கட்சியில் சேர்ந்ததும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின்  எஸ்.சி.எஸ். டி. பிரிவு மாநில துணை தலைவர் என்கிற கட்சி பதவி கொடுக்கப்பட்டது. அந்த வினாயகமூர்த்தி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் 6 பேர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது,

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலபட்டியல் அணி செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அண்மையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் ஒப்புதலோடு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அதன்படி அதில் உள்ள ஒரு தீர்மானம்  தமிழகத்தில் உள்ள  அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்களின் உருவ படத்தை வைக்க அந்தந்த அலுவலகங்களின் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது தான் அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். பிரதம் மோடி படம் வைக்காத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரியும் போராடுவோம்" என்றனர்.

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் பா.ஜ.க.வினர் புதுசு புதுசா யோசித்து திட்டமிட்டு செயல்பட தொடங்கி விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்