![election campaign tamilnadu cm speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/X9mq1A4Di4UMXCVDY9n9b_NMFwbOnu9IDdEWHwS7UWo/1612715913/sites/default/files/inline-images/cm78999.jpg)
துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்? என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "நாட்டிலேயே அதிகமாக பொய் பேசுபவர் ஸ்டாலின். ஏழு பேர் விடுதலையில் தி.மு.க.வினர் பொய் பேசி வருகின்றனர்; விடுதலைப் பற்றி அ.தி.மு.க.தான் தீர்மானம் நிறைவேற்றியது. பெட்டியில் மனு போட சொல்கிறார் ஸ்டாலின்; ஆட்சிக்கு வருவது எப்போது? பெட்டியைத் திறப்பது எப்போது? தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்? துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்? நீட் தேர்வைக் கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் தான். கண்ணன் தேக்கம் நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றி சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்ததது அ.தி.மு.க." என்றார்.