Skip to main content

கையசைத்த விஜயகாந்த்! - விசில் பறந்த பிரச்சாரம்! (படங்கள்) 

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி (24/03/2021) கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 

 

பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தபோது விண்ணைப் பிளக்கும் அளவிற்கு விசில் சத்தம் எழுப்பி தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். மேலும், விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரம் காரணமாக, அக்கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

மற்றொரு புறம் தே.மு.தி.க. கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு தொண்டர்களை நேரில் சந்தித்து, வாக்குச் சேகரித்து வருகிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்