முதல்வர் எடப்பாடி வெளிநாடு சென்று இருப்பதை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வந்தவர் தனது போடி தொகுதியில் புதிய சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முல்லை பெரியார் மற்றும் வைகை அணை தண்ணீரை விவசாயிகளுக்காக திறந்து விட்டார். அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
.
இந்தநிலையில் தான் ஆண்டிபட்டிக்கு வந்த துணை முதல்வர் ஓபிஎஸ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது....... தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உடன் செல்லாமல் இருப்பது குறித்து முதல்வர் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார் . முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி வரை உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேர் விடுதலை குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டது. அதன் பின்னர் ஆளுநரின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் விட்டுள்ளது. தற்போது அவரது தீவிர பரிசீலனையில் உள்ளது. எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள ஏழு பேர் விடுதலையில் ஜெயலலிதா எடுத்த முடிவு தற்போது அதிமுகவின் நிலைப்பாடாகும் என்று கூறினார் இந்த பேட்டியின்போது மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.
.