மதிமுக எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராக பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். என்ன காரணம் என தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை விழுங்கிய அவர் 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு சுதா மருத்துவமனை என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.