கருகருவென ஸ்டைலாக தூக்கி சீவி முடி! வெளீர் நிறம், டிப்டாப் டீ சர்ட், எப்போதும் ஒலிக்கும் செல்போன், பெரிய கார், விலையுர்ந்த டூவிலர், மெலிதாக சிரிக்கும் சிரிப்பு, எப்போதும் அப்பாவித்தனமான முகம், எப்போதும் தன்னம்பிகையான வார்த்தை இவை மூலதனமாக வைத்து பால்டேனியலை நம்பி ஏமாந்த பெண்களின் பட்டியல் நீளம்.
இதில் அவனின் குடும்ப சோகம், மனநிலை சரியில்லாத மனைவி, குடும்ப வாழ்க்கையில் ஏமாற்றம் என்று தன்னை ஏமாளியாக காண்பித்து அப்பாவி பெண்களை ஏமாற்றி வரும் பால்டேனியல் பற்றி கதை தான் இது,
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகள் திருச்செல்வி என்கிற அபி திருமணமாகி வரதட்சணை கொடுமையினால் விவாகரத்தான இவருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செல்வி தன் மகன் தாயாருடன் கும்பகோணம் சாலையில் உள்ள ஸ்ரீராம் நகரில் வசித்த வந்தார்.
திருச்செல்வி அம்மா கம்பியூட்டர் டைப்பிங் கடை வைத்துள்ளார். பக்கத்து வீட்டில் உள்ள பால்டேனியல் என்பவர் வாடகை பத்திரம் அடிக்க வேண்டும் என்று அறிமுகம் ஆனாவர் பின்பு அடிக்கடி இவருடைய கடைக்கும் பத்திரம் அடிக்க வந்துள்ளது.
அப்படி அடிக்கடி கடைக்கு வந்தவர் தனக்கு ஏற்கனவே திருமணமான மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தன் மனைவியை வீட்டில் இருந்தாகவும் அவரை விவாகரத்து செய்துவிட்டதாக அவரை திருநெல்வேலியில் கொண்டு போய் விட்டதாகவும் சொல்லி அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தநிலையில் திருச்செல்வியை பார்த்தவுடன் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்லவும் திருசெல்வியின் அம்மா விவகாரத்து ஆணை காட்டுங்கள் என்று சொல்லவும் அதை பிறகு காட்டுகிறேன் என்று சொல்லி சமாளித்திருக்கிறார். இவர்களும் பக்கத்து வீட்டில் இருப்பவர் என்பதை இதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் திருமணத்திறகு திருச்செல்வியும் தாயும் சரி என்று சொன்னவுடன் பால்டேனியில் வீட்டில் அழைத்து பேசலாம் என்று சொல்லவும் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு என்னோட அப்பா திருச்சி பாலக்கரையில் இரண்டாவது மனைவியும் வாழ்ந்து வருகிறார். அவர் இதய நோயாளி ஏற்கனவே எனக்கு முதல் திருமணம் விவகாரத்து ஆனதே அவருக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இரண்டாவது திருமணம் என்றால் உயிக்கே ஆபத்தாகிவிடும் அதனால் திருமணத்திற்கு யாரையும் அழைக்க வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.
திரு செல்வியும் அம்மாவும் எல்லாம் இயல்பாக நடப்பதை நண்பர்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2018 செப்டம்பர் 19 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமத்திற்கு கல்யாண ரசீது கோவிலில் தரவில்லை.
திருமணமான மறுநாளிலிருந்து என் தங்கையுடன் பேசியதற்கு பால்டேனியல் அசிங்கமாக பேசி பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார். டேபிள் சேர் எல்லாம் தூக்கி போட்டு உடைத்து எனக்கு நீங்க நகை எதுவும் போடாமல் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று பிரச்சனை பண்ணவும். அம்மாவும் பொண்ணும் பால்டேனியலின் இந்த அரக்கதனமாக ஆட்டத்திற்கு பயந்து விட்டனர்.
IFB கம்பெனியில் மேலாளராக பணி புரியும் பால்டேனியல் அதை ஏஜென்சி தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று சொல்லி திருச்செல்வி பெயரிலே நடத்தலாம் என்று சொன்னதை நம்பி திருச்செல்லி 10 லட்சம் கொடுத்துள்ளார்.
திருச்செல்வி பெயரில் காட்டூர் மலையப்ப நகரில் ஷாரூம் தொடங்கியுள்ளார். தொழில் பற்றிய கணக்கு வழக்கை எதுவும் திருச்செல்வி தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார் தொழிலில் அபிவிருத்தி என கூறி முத்திரலோன் 5 இலட்சம் அப்படி என்று 17, இலட்சத்திற்கு மேல் திருச்செல்வியுடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையே திருச்செல்வி கர்ப்பமடைய ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதேவி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி கருவை கலைக்க சொல்லி டார்ச்ச செய்தார். அங்கிருந்த மருத்துவர் கணவர் கட்டாயப்படுத்தி கருக்கலைக்க சொல்கிறாரா என்று கேட்க திருச்செல்வியும் ஆமாம் என்று சொல்லவும் அதிர்ச்சியடைந்த மருத்துவர் இரண்டு பேரையும் அழைத்து கவுன்சில் செய்ய கடையில் பால்டேனியல் கட்டாயம் கருவை கலைக்க வேண்டும் என்று பிடிவாதம் என்று கருவை கலைக்க வைத்தார்.
நானும் வேறு வழியில்லாம் இருந்த நிலையில் ஒருநாள் பால்டேனியல் குளித்துக்கொண்டிருந்தபோது அவருடைய செல்போன் மணி அடிக்க அதை எடுத்து திருச்செல்வி பேசியபோது பால்டேனியலின் முதல் மனைவி நாரயணி என்கிற ஜெனிபர் பேசியிருக்கிறார். இரண்டு பேரும் பேசும் போது முதல் மனைவியும் விவகாரத்து செய்யவில்லை என்பதும், பணத்திற்காக விவகராத்து, கல்யாணம், என நடித்திருப்பது தெரியவந்திருக்கிறது.
விவாகரத்து செய்யாமல் ஏன் என்னை ஏமாற்றினீர்கள் என்று திருச்செல்வி கேட்டபோது. உன் வேலையை பார் நான் என் மனைவியுடன் பேசுகிறேன். நீ என்னுடைய இமேஜ் டச் பண்ணிவிட்டாய் என்று விவகாரத்து பத்திரம் இரண்டு தயார் செய்து இனி உன்னோடு வாழ முடியாது என்று கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கி கொண்டார்.
இதற்கு இடையில் திருச்செல்வி பெயரில் வாங்கிய கடன், அந்த 18, இலட்சம் இது எல்லாம் யார் அடைப்பது என்பது குறித்து பிரச்சனை பெரிதாக மாறியுள்ளது. இதனால் திருச்செல்வி பெயரில் உள்ள இந்த நிறுவனத்தை இனி நடத்த முடியாது என்று திருச்செல்வியின் மீது வங்கி விவரங்கள் அடங்கிய போனை முகத்தில் எறிந்து விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.
உடனே அந்த போனை எடுத்து ஆய்வு செய்தபோது திருச்செல்வியை ஏமாற்றி பணத்தை பலருக்கு செக் கொடுத்திருப்பது தெரியவந்தும் அதிர்ச்சியடைந்து வங்கிக்கு அழைத்து அனைத்து செக்கிற்கு பணத்தை நிறுத்தும்படி சொல்லிட்டு, அந்த வங்கி கணக்கிற்கான ஏடிஎம். எல்லாவற்றையும் வேறு எண்களை மாற்றியிருக்கிறார். இதை தெரிந்து கொண்ட பால்டேனியல் வீட்டிற்கு வந்து குழந்தையும் உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டவும் பயந்து போன திருச்செல்வி தன்னை திருமணம் செய்து கட்டாய கருக்கலைப்பு செய்து தொழில் செய்வதாக கூறி பண மோசடி செய்த பால்டேனியில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசின திருச்செல்வி என்னுடைய முதல் திருமண வாழ்க்கை வரதட்சனை கொடுமையினால் 1 குழந்தையும் என் வாழ்க்கை அர்த்தமற்று போய் நானும் என் குழந்தையும் நிம்மதியாக இருந்த நிலையில். இந்த பால்டேனியல் ரொம்ப நல்லவன் போல் வேடம் போட்டு என்னை ஆசை காட்டி கல்யாணம் பண்ணி, கரு உண்டாக்கி, கருவை கலைத்து, என்னுடைய பணத்தை மோசடி செய்து ஏமாற்றி இப்போ இன்னும் மோசமான நிலைக்கு தள்ளிவிட்டான்.
தனியே இருக்கும் பெண்களுக்கு திருச்செல்வி வாழ்க்கை ஒருவகையான எச்சரிக்கை பாடம் தான்.