Published on 02/12/2020 | Edited on 02/12/2020

இலங்கை அருகே நள்ளிரவு கரையைக் கடக்க இருக்கிறது 'புரெவி' புயல். திரிகோணமலை கிழக்கு வடகிழக்குத் திசையில், 70 கிலோ மீட்டர் தொலைவில் புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல், திருகோணமலைக்கு வடக்கே நள்ளிரவு கரையைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து 450 கிலோ மீட்டர் கிழக்கு வடகிழக்குத் திசையில் 'புரெவி' புயல் நிலை கொண்டுள்ளது. இதனால், 'பாம்பன்-கன்னியாகுமரி' இடையே டிசம்பர் 3 -ஆம் தேதி நள்ளிரவு அல்லது டிசம்பர் 4 -ஆம் தேதி அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் மிகக் கனமழை பெய்து வருகிறது.