Skip to main content

சர்ச்சை கருத்து - அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் அதிரடி நீக்கம்!

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
HARI

 

 


பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் ஹரிபிரபாகரன் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவமனைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது.
 

hari


இந்த சம்பவம் குறித்து தகவல் தொழில்நுட்ப பரிவு இணைச் செயலாளர் தனது டிவிட்டர் பதிவில், பிஸ்கட்களுக்காக குறைக்கும் தெரு நாய்களை உள்ளை அனுமதிப்பதை விட வெளியில் கட்டி போடுவதே சிறந்தது என குறிப்பிட்டிருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

admk


இந்நிலையில், இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த ஹரிபிரபாகரன் (மாவட்ட தகவல் தொழில்நுட்ப பரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்