Skip to main content

குளம் ஆக்கிரமிப்பு : அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்த பாவத்திற்கு கொலையான தந்தை - மகன்! 

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இது பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 50க்கும் மேற்பட்டோர் இந்த குளத்தில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். 


 

இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த ராமர் (60), அவரது மகன் வாண்டு (40) ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
 

இந்நிலையில் காலை 7.30 மணியளவில் ராமர் அவரது வீட்டில் இருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் அவரது மகனை அந்த கும்பல் தேடியது. இதில் அருகில் உள்ள கீழமேடு என்ற இடத்தில் உள்ள வாட்டர் டேங்க் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த வாண்டுவையும் மறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்