![Theni SP](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wr5ZpDd4idefw37rU8_xKQrc4ksPUt1QolFNtjrBJVk/1590569357/sites/default/files/inline-images/803_3.jpg)
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் மூலம் அனுமதி பெற்று சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சோதனைச் சாவடி வழியாக வெளிமாநிலத்தில் வேலை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் வந்த ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர்.
அப்போது மதுரை மாவட்ட கலெக்டரிடம் இ-பாஸ் பெற்று மகாராஷ்டிராவில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்ட தொழிலாளர்களை ஏற்றி வந்ததாகத் தெரிவித்தனர். அந்த பஸ்களின் டிரைவர் ராமையா மற்றும் பிச்சைமணி காண்பித்த இ-பாஸ் போலியானது எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் டிரைவர்கள் ராமையா மற்றும் பிச்சைமணி, உரிமையாளர் சண்முகம், மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த நபர் தலைமறைவாக உள்ளார். இதுபோன்ற வெளி மாநிலத்திலுள்ள தொழிலாளர்களை ஏற்றி வர போலியான இ-பாஸ் தயார் செய்து பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.