Skip to main content

திரௌபதி படத்தை ஆம்பூரில் திரையிட வேண்டாம்... விசிக மனு...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

திரௌபதி திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. சமீபத்தில் அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில் அளவுக்கு அதிகமாக சாதி தாக்குதல் உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

Draupadi movie issue

 



இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் ஒன்பது திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் திரௌபதி திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை சந்தித்து ஆம்பூர் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சந்திரன், ஆம்பூர் நகர செயலாளர் சக்தி, ஆம்பூர் நகர அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட  தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

 

Draupadi movie issue

 



அதேபோல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தத்தை சந்தித்தும் மனு தந்துள்ளனர். இதனால் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்