Published on 11/08/2021 | Edited on 11/08/2021
![doctor incident in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/eJLnQXVmqsGHaHJtDnWWt11xwoPKB76P3nivKHp1Wig/1628646372/sites/default/files/inline-images/siu_2.jpg)
அரசு மருத்துவமனை விடுதியில் பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் பெண்கள் விடுதியில், முதுநிலை பயிற்சி மருத்துவர் சோபியா (வயது 27) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விடுதி அறையில் இறந்து கிடந்த பயிற்சி மருத்துவர் சோபியா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அரசு மருத்துவமனையின் விடுதியில் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.