Skip to main content

குழந்தைகளை தனிமைப்படுத்தாதீர்கள்: பெற்றோருக்கு நீதிபதி அறிவுரை

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

 

child


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. 

 

 

 

இதில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி, 
 

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. 18 வயதிற்குட்பட்ட குழந்தை பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு முதன்மை தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும். இதற்கு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) தேவையில்லை. 

 

 

 

சிகிச்சைக்கு பின்பு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ அலுவலரால் உளவியல் ரீதியான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

 

 

 

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். குழந்தைகளை தனிமைப்படுத்தாமல், அவர்களிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும் என கூறினார். 
 

சார்ந்த செய்திகள்