தேனி க.விலக்கில் செய்தியளர்களை சந்தித்த அமமுகவின் முக்கிய நிர்வாகியான தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில்,
இந்த தேர்தலை அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக பார்க்கிறோம். நாங்க ஜெயிச்ச பின் எப்படி திமுக ஆட்சிக்கு வரும்? எனவே திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. நாங்க இப்போ 22 தொகுதியிலும் ஜெயிக்க போறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும். அப்படி வீட்டிற்கு அனுப்பிவிட்டால் பொதுத்தேர்தல்.
பொதுத்தேர்தலில் மெஜாரிட்டியில் அமமுக ஜெயித்தால் ஜெ. ஆட்சியை கொடுப்போம். 22 தொகுதியிலும் ஜெயிக்கிறோம். அப்படி ஜெயித்தால் அவங்களுக்கு மெஜாரிட்டி இல்லை. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 34 எம்.எல்.ஏ வேணும். அப்போது திமுக எங்களுக்கு ஆதரவு கொடுத்துதான் ஆகணும். ஒருவேளை கொடுக்கா விட்டால் எங்களை கண்டு திமுக பயந்துள்ளது என அர்த்தம்.
திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடையாது. ஆனால் இந்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் வாய்ப்பு எனக் கூறினார்.