Skip to main content

திவாகரன் உடல்நலம் குன்றியவர்... தினகரன் பேட்டி

Published on 26/04/2018 | Edited on 27/04/2018
dd

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக அணிசெயலாளர் தவமுனியசாமியை நலம் விசாரிக்க சென்றபோது புதுக்கோட்டை  கட்டுமாவடியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ரத்தினசபாபதி எம்.எல்.ஏ மற்றும் அமமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது காருக்குள் இருந்தே தினகரன் பேட்டியளித்தார்.

’’குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது. சில அமைச்சர்கள், சில உயர் அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்டது இனி வெளிச்சத்துக்கு வரும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும். இது குறித்து விசாரித்து நியாயமான நடவடிக்கை எடுக்கவேண்டும். திவாகரன் பொதுச்செயலாளரின் தம்பி, எனது மாமா அவ்வளவு தான். அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டவர் கடந்த 2002- ம் ஆண்டே 50 வயதில்  பைபாஸ் செய்து உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். நேற்று பேட்டியின் போது கூட சோர்வாகத் தான் இருந்தார். பாவம் அவரைப்பற்றி கேள்வி கேட்டு
 என்னுடைய நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். தனி நபர் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

நாங்கள் அம்மாவின் தொண்டர்கள்.  மீண்டும் அம்மா ஆட்சி அமைய போராடுகிறோம். அதனால இந்த மாதிரி சின்ன சின்ன காமெடிகள் எல்லாம் எங்களை பாதிக்காது.


  அமைச்சர் ஜெயக்குமார் அமமுக விலிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம் தினகரன் குடும்பம் தவிர என்று சொல்லி இருக்கிறாரே.?
   அவர்கிட்ட யார் போய் வருவதாக சொன்னார்கள் என்று தெரியல.. அதனால அவரிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும். 


திவாகரன் நடவடிக்கைகளுக்கு பின்னால பாஜக இருக்கிறதா.?
அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.
   காவிரி டெல்டாவுக்காணது.. எங்களுக்கு இல்லை என்று அமைச்சர் வேலுமணி பேசியிருப்பது.?

அவர் தமிழ்நாட்டுக்கு அமைச்சரா? இல்ல கோவை தொண்டாமுத்தூருக்கு அமைச்சரான்னு தெரியலயே’’ என்றார். 

சார்ந்த செய்திகள்