Published on 16/08/2023 | Edited on 16/08/2023
![dance teacher unethical incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/Exn5NWELbL3S1ECiMJexVmlnQJDaNOX1fbFgfQlmkdY/1692205195/sites/default/files/inline-images/a1118.jpg)
சென்னை நொளம்பூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெற்றோர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த பாலியல் தொல்லை சம்பந்தமாக ஏற்கனவே குறிப்பிட்ட நடன ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் தாளாளர் அளித்த புகாரின் பேரில், நடன ஆசிரியரை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் நடன ஆசிரியரை பெற்றோர்களும் உறவினர்களும் தாக்கும் அந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.