Skip to main content

விளையாட்டு விபரீதமான பரிதாபம்: மாணவன் உயிரிழப்பு

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நீச்சலடித்து கிணற்றில் விளையாடிக்கொண்டிருந்த மாணவனை விளைட்டுபோல தண்ணீரில் அமுக்கி பிடித்ததால் பரிதாபமாக பலியாகியுள்ளான் அந்த மாணவன்.

 

பெருந்துறை அருகே சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வரப்பாளையம் ஊராட்சியில் குடிருந்துவருபவர்  பாரதி இவரது மகன் பாலமுருகன், 13 வயது இவன் வரப்பாளையம் அரசு உயர்நிலைபள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து விடுமுறையில் உள்ளான்.

 

Critical Game:student's death

 

மேற்படி இதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சதீஸ்(எ) கோபால் இவர் தனியார் பனியன் கம்பனி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி மாணவன் பாலமுருகனை காணவில்லை என அவரது பெற்றோரும் உறவினர்களும் தேடி வந்தனர்.

 

 

இந்நிலையில் அன்று மாலை மேற்கு சாணார்பாளையம் பூசாரிச்சிகாடு பகுதியில் உள்ள கிணற்றில் பாலமுருகன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையறிந்த பாலமுருகனின் தாயார் பாரதி பெருந்துறை காவல்நிலையத்தில் புகாரளித்தார். மாணவனின் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சதீஸ் என்ற கோபாலை விசாரணை செய்த போது, மாணவன் மரணம் குறித்த தகவல் வெளியானது. 

 

 

12ம் தேதியன்று பூசாரிச்சிகாடு பகுதியில் உள்ள கிணற்றில் மாணவன் பாலமுருகன், கோபால் உள்ளிட்ட 10க்கும் மேட்பட்டோர் நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கோபால் பாலமுருகனின் தலையை தண்ணீருக்குள் அமுக்கி பிடித்து விளையாடியிருக்கறார் அப்போது எதிபாராத விதமாக பாலமுருகன் முச்சு திணறி கிணற்றுக்குள் மூழ்கிவிட்டார். இந்த தகவலை கோபால் பாலமுருகன் பெற்றோரிடம் மறைத்துவிட்டார்.

 

 

பின்னர் தீயணைப்புதுறை வீரர்களின் உதவியோடு மாணவன் சடலத்தை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோபாலை கைது செய்த போலீசார் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருத்தல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

விளையாட்டு வினையாகி ஒரு மாணவன் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்