Skip to main content

அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Court orders Minister Senthilpalaji to appear in person

 

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இருவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

 

அதன் பேரில், செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூலங்களைக் குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிப்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆலிசியா முன்பு இன்று (21.09.2021) விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி, கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

 

இதையடுத்து, வாக்குமூலத்தின் நகலைப் பெறுவதற்காக, அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உட்பட இருவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்