Skip to main content

'நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயக்க அனுமதி'- தமிழக அரசு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

coronavirus lockdown tamilnadu government relaxation announced


சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நாளை (23/05/2020) ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர, தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், நாளை (23/05/2020) முதல் (தினமும் காலை 07.00 மணிமுதல் மாலை 07.00 மணிவரை) இயக்க அனுமதிக்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை. 
 

 

coronavirus lockdown tamilnadu government relaxation announced


பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்