Skip to main content

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் - பூஸ்டர் டோஸ் செலுத்துக்கொள்ள அறிவுறுத்தல்

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

corona Vaccination Camp in Tamil Nadu today

 

தமிழகத்தில் இன்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

இந்த முகாமில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது.பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்