
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 5000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இதனால் பல்வேறு நாடுகளில் பொருளாதார இழப்புகளும், வேலை இழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. பல்வேறு நாடுகள் இதனால் முடங்கிப்போய் செய்வதறியாது திகைத்து வருகின்றார்கள். மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முதலியவர்கள் காலநேரம் பார்க்காமல் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். தற்போது வெளியாகி இருக்கின்ற புகைப்படம் ஒன்று அதை உறுதிப்படுத்துவது போல் இருக்கின்றது. அதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநர் ஒருவர் முகச்சவரம் செய்யக்கூட நேரமில்லாமல் ஆம்புலன்ஸின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியைப் பார்த்து ஷேவ் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.