சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்லபாண்டியன், வாட்ஸ்-ஆப் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோருக்கு ஒரு தகவலை அனுப்பி உள்ளார்.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு அமல்படுத்தப்படவிருக்கிறது. இதனால், ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கூடுவார்கள், இதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைக் கட்டுப்படுத்த முடியாது. எனது வாட்ஸ்-ஆப் தகவலை, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, இந்தக் கூட்டம் கூடுவதற்குத் தடை விதித்து அனைத்து மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று சேர்க்க ரேஷன் கடை ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாட்ஸ்-ஆப் தகவல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.