Published on 26/10/2018 | Edited on 26/10/2018
![container lorry puncher in middle of the road](http://image.nakkheeran.in/cdn/farfuture/OYzr3RUmMg_xLk0CP4EyT0k8Jo_fY8mqAzYdhITk2JE/1540543146/sites/default/files/inline-images/AAA_0.jpg)
சென்னை ரிசர்வ் வங்கிக்கு பணம் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி சென்னை அமைந்தகரையில் பஞ்சராகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு கிட்டத்தட்ட 40 அடி நீளம் கொண்ட மூன்று கன்டெய்னர் லாரிகள் மூலம் நேற்று இரவு பணம் கொண்டு செல்லப்பட்டது.
![container lorry puncher in middle of the road](http://image.nakkheeran.in/cdn/farfuture/BxMPfyriLU6xPzPdyx1y4U9aDsTZXTVBaH3y-PycVEY/1540543162/sites/default/files/inline-images/AASASA.jpg)
அப்பொழுது பணம் கொண்டு சென்ற மூன்று கன்டெய்னர் லாரிகளில் இரண்டு கண்டெய்னர் லாரிகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கிளையை அடைந்தது. ஆனால் ஒரு கண்டெய்னர் லாரி மட்டும் அமைந்தகரை அருகேயுள்ள ஸ்கைவாக் அருகே பஞ்சராகி நடுவழியில் நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அறிந்து அங்கு ரிசர்வ் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதன்பின் இழுவை வண்டி மூலம் கண்டெய்னர் லாரி மீட்கப்பட்டு பாதுகாப்பாக பணத்துடன் சென்னை ரிசர்வ் வங்கி கிளையை அடைந்தது.