முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாம் தமிழர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். சமூக ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டார். முதலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாக பேசிய சங்கர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி இந்த பேனா சின்னம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். ஆனால் சுற்றுச்சூழல் குறைபாட்டை முழுமையாக நிவர்த்தி செய்த பிறகுதான் அமைக்க வேண்டும் என அவரது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். அங்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்க் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருவதால் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.