![Compressed Bio Gas Plant at Namakkal cm palanisamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/RxXayLxYVvlschoVTliIRAXsI6CnSqRziC0FoKCMN9I/1592903299/sites/default/files/inline-images/cm342222.jpg)
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்தில் 'Compressed Bio Gas' உற்பத்திப் பணிகளை முதல்வர் பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதேபோல் நாமக்கல், சேலம், புதுச்சத்திரம், ராசிப்புரத்தில் 5 CBG சில்லறை விற்பனை நிலையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, "சென்னையின் மின் தேவையைப் பூர்த்திச் செய்ய இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சூழலி மின்திட்டம் தமிழக அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை உரம் மூலம் நாளொன்றுக்கு 15 டன் பயோ கேஸ் உற்பத்திச் செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கற்றாலை மின் உற்பத்தி திறன் 8,523 மெகாவாட்டாக இருக்கிறது. சூரிய ஒளிமின் ஆற்றல் உற்பத்தி 4,054 மெகாவாட்டாக இருக்கிறது." என்றார்.