இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 95- வது பிறந்த நாளையொட்டி இன்று (26.12.2019) பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பேரணி என்பதால் 8,000 பேர் தான் பங்கேற்றதாக எண்ணிக்கையை குறைத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். எவ்வளவு வழக்கு போட்டாலும் சந்திப்போம். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்களை இணைத்து போராட்டம் நடத்துவோம் என்றார்.