Skip to main content

கமலுக்கே கூட்டணி அதிகாரம் - ம.நீ.ம பொதுக்குழுவில் தீர்மானம்! (படங்கள்)

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அதேபோல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் ஆகியவை பற்றிய முடிவுகளை எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்