Skip to main content

வலைதள காதல்; தமிழக மருமகளான சீன பெண்!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

chinese girl married tamil boy at cuddalore

 

சமூக வலைத்தளம் மூலம் தமிழக இளைஞர் ஒருவர் சீன பெண்ணை திருமனம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மேற்கு வேணு கோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் சீனா மற்றும் பாங்காக் நாடுகளில்  ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு  நட்பாக மாறி நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. அதன் பின்னர இருவரும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து செய்ய முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த திருமணத்திற்கு இருவீட்டார் சம்மதத்துடன் கடலூரில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது குடும்பத்துடன் சீனாவில் இருந்து மணமகள் யீஜியோ, கடலூருக்கு வந்தார். பின்னர் கடலூர் முதுநகரில் இவர்கள் இருவருக்கும் இந்து கலாச்சாரத்தின் படி திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்தின் போது மணமகன் பாலச்சந்தர் பட்டு வேட்டி மற்றும் சட்டையிலும், சீன மணமகள் யீஜியோ பட்டு சேலை மற்றும் தங்க நகைகளுடன் அணிந்து இருந்தார். மணமக்கள் இருவரும் மணவறையில் அமர்ந்து இருக்க அருகில் மங்கள இசை முழங்க இந்து முறைப்படி யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்