Skip to main content

முருகனைக் காண மார்கழி பனியில் கூடும் கூட்டம்!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

மார்கழி மாத ம் முழுவதும் தமிழ் கடவுளாகிய முருகனுக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இதில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு இந்த வருட மார்கழி மாத சிறப்பு வழிபாடு கோமாதா பூஜையுடன் இன்று தொடங்கியது. பின்னர் மூலவர் சன்னதியான முருக கடவுள் முன்பு பக்தர்கள் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினார்கள்.

 

chennimalai murugan temple



அதைத்தொடர்ந்து அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. அப்போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கடும் பனி என்று கூட பாராமல் ஈரோடு, திருப்பூர் என பல ஊர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாடு வருகிற ஜனவரி 14ம் தேதி மார்கழி மாதம் முழுவதும் தினமும் அதி காலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழாக்குழுவினர் செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்