இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் நேற்றும், இன்றும் இராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. இதில் கன்னியாகுமரியில் பத்திற்க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கடல்பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு கடல் நீர் உள்வாங்கிய நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் தரைதட்டியநிலையில் காணப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், பல்வேறு பகுதிகளில் கடல்சீற்றம் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிப்பதாக தெரிவித்தார்.