
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் அலெக்ஸ் (வயது 22) என்பவர் மதுபோதையில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், காவலர்கள், வாகன ஓட்டிகளை எனப் பலரையும் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் காவலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளைத் தாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸை கைது செய்து அவர் மீது 6 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் முதல் முறையாக மது அருந்தியதால் ஏற்பட்ட போதையால் சாலையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டிப்ளமோ படித்துள்ள இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோலர் நிறுவனத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இவரைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.