![teach](http://image.nakkheeran.in/cdn/farfuture/bw_jtbiACkvEo7fro2ub9oTAQu07Crni_fz51V0_TRE/1533347682/sites/default/files/inline-images/teach.jpg)
சிவகங்கை திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் போதையில் ‘மட்டையான’ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலப்பூவந்தி அரசு உயர்நிலைப் பள்ளி 220 மாணவ - மாணவிகள் 13 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் ஒரு வருடமாக காலியாக உள்ளது. இதனால் சிவகுருநாதன் என்ற ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இதே பள்ளியில் திருவேகம்பத்தை சேர்ந்த ரஜினிகாந்த் (40), உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் ரஜினிகாந்த் நேற்று காலை முழு போதையில் பள்ளிக்கு வந்ததுடன் வகுப்பறையில் படுத்து உருண்ட படியே இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், மாணவர்கள் போதையில் மட்டையாகி கிடந்த ரஜினிகாந்தை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்க முடியாமல் போதை மயக்கத்தில் புலம்பிக்கொண்டே இருந்தார்.
இதுபற்றி சக ஆசிரியர்கள் கல்வி அதிகாரிக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.