Published on 28/10/2020 | Edited on 28/10/2020
![chennai high court order cbcid investigation medical highers study students](http://image.nakkheeran.in/cdn/farfuture/xGWSvr-yqLAjxbPjrTOGXl7pzVWBOnOkE6jG1ia5ED0/1603874705/sites/default/files/inline-images/CHENNAI%20HIGH%20COURT%202_35.jpg)
மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு எனத் தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலியாக இருந்த மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கு முறைகேடாக மாணவர் சேர்க்கை நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (28/10/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மருத்துவ மேற்படிப்பு இடங்களை விலைக்கு வாங்கும் மாணவர்களால் சமுதாயத்திற்குப் பெரிய ஆபத்து எனக்கூறி மருத்துவ மேற்படிப்பு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணை குறித்த அறிக்கையை ஜனவரி 30- ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.