



Published on 24/12/2020 | Edited on 24/12/2020
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாளின் உடல் நலத்தை மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரியுடன் சென்று விசாரித்தார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கும் இருக்கும் என மு.க.அழகிரி கூறிய நிலையில் தனது தாயாரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் அங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.