






சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று (27/07/2022) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பு அடையாள விமானத்தில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டணமில்லாமல் விமான பயணம் மேற்கொள்வதுடன், விமானத்தில் பறந்து கொண்டே சதுரங்கம் விளையாடவுள்ள சிறப்பு விமானப் பயணத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு தம்பி சின்னத்தை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.