முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்திவந்த நிலையில், கடந்த மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்படும் என அறிவித்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தமிழ்நாடு அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் தெரிவித்தது. அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும், என்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று, பெயர்பலகை மாற்றும் பணி விறுவிறுவென நடைபெற்றது. இதற்குமுன்பு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.