Published on 30/11/2018 | Edited on 30/11/2018

கடந்த ஆறு மாதகாலமாக உயர்ந்துவந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தற்போது குறைத்து கொண்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 6.52 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதேபோல் மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூபாய் 133 குறைத்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.